கண்டி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து : மூவர் பலி

கண்டி – கொழும்பு பிரதான வீதியில், இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கண்டி – கொழும்பு பிரதான வீதியின், நிட்டம்புவ பகுதியில் விபத்து சம்பவித்துள்ளது. தனியார் பேரூந்து, கப் ரக... Read more »

அம்பாறை பாண்டிருப்பில், சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை

அம்பாறை பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஸ்ரீ அரசடியம்பாள் ஆலயத்தில், சமய குரவர்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை தினம், இன்று நடைபெற்றது. இங்கு கல்முனை பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதும் குழுவினரால் சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரங்கள் பாராயணம் செய்யப்ட்டது. அத்துடன் ஆலயத்தின் நித்திய... Read more »

அமைச்சர் மனோ கணேசன் விசேட அறிவிப்பு

உங்கள் ஊர் தேடி வரும், இந்து – சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை, முதற்கட்டமாக கொழும்பிலும், அதனைத்தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் நடத்தப்படும் என, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது... Read more »

இரத்தம் மாற்றி ஏற்றியதால் உயிரிழந்த சிறுவனின் வழக்கு, கை மாற்ற உத்தரவு

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயதுடைய ஜெயக்காந்தன் விதுலஷ்சன் என்ற சிறுவன், கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின்போது, அவருக்கு இரத்தம்... Read more »

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பயிற்சிச் செயலமர்வு

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கிடையே விளையாட்டின் மூலமாக சமத்துவம், சமாதானம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஐரோப்பிய காற்பந்து சங்கம் மற்றும் அவுஸ்திரேலிய நிதி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்... Read more »

மட்டு, போதனா வைத்தியசாலையில், மருந்துப் பற்றாக்குறை நிவர்த்தி

கடந்த ஐந்தாம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் கே.எம்.ரூபராஜன் 45 க்கு மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தட்டுபாடு நிலவுவதாக தெரிவித்திருந்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் மற்றும் பிராந்திய சுகாதார... Read more »

நீர்கொழும்பு மாநகர சபை எதிர்கட்சி தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு

நீர்கொழும்பு கட்டானையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும், நீர்கொழும்பு மாநகர சபை எதிர்கட்சி தலைவருமான ரொய்ஸ் விஜித பெர்ணான்டோவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கட்டானை பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்று... Read more »

நுவரெலியா ஸ்டெதன் பகுதியில் 12 பேர் கைது

நுவரெலியா ஹட்டன் ஸ்டெதன் தோட்டப் பகுதியில், வீடு ஒன்றுக்குள் அத்துமீறி சென்று, வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தியதாக கூறப்படும் 12 சந்தேக நபர்கள், ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு, ஸ்டெதன் தோட்டப் பகுதியில் உள்ள... Read more »

நுவரெலியா, மௌசாகலை நீர்த்தேக்கத்தில் விடப்பட்ட, இறால் குஞ்சுகள்

நுவரெலியா மஸ்கெலியா மௌசாகலை நீர்த்தேக்கத்தில், 2 இலட்சத்து 60 ஆயிரம் இறால் குஞ்சுகள், இன்று விடப்பட்டுள்ளன ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வேலைத்திட்டத்தின் கீழ், நுவரெலியா நன்னீர் மீன் வளர்ப்பு தினைக்களத்தினால், மஸ்கெலியா மௌசாகலை நீர்த்தேக்கத்திற்கு இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. பெருந்தோட்ட மக்களின் போஷாக்கு குறைபாட்டை... Read more »

கொழும்பில், பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்காக, பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு, காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி, லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் பூட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதன் காணரமாக,... Read more »
error: Content is protected !!