ஜனாதிபதி சிறிசேன தனது ஆட்சிக்காலத்தை நீடிக்க மாட்டார் : தேசப்பிரிய

எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி, ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் நகர்வுகள் மற்றும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள தாமதங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டார்.... Read more »

இலங்கை கிரிக்கட் அணிக்கு இடைக்கால பயிற்றுவிப்பாளர் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக ஜெரோம் ஜெயரத்னே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை நியூஸிலாந்து அணியுடனான தொடரின் போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹதுருசிங்கவை... Read more »

தனிநபர் பிரேரணை சட்ட ரீதியானது இல்லை : ஜனாதிபதி

மரண தண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும் என, பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை சட்ட ரீதியானது இல்லை என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது சட்டத்திற்கு... Read more »

ஊடகவியலாளர்களுக்கு ஒளிப்பதிவு செய்ய அனுமதி மறுப்பு !

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில், ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கூட்டத்தை ஒளிப்பதிவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம், இன்று நடைபெற்றது. ஊடகவியலாளர்கள், கூட்டத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஒளிப்பதிவு செய்ய முடியும் எனவும், கூட்டத்தின் போது இருந்து... Read more »

விவசாயி மகன் விளையாட்டில் சாதனை !

மட்டக்களப்பு மாவட்டத்தில், வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள, மிகவும் பின்தங்கிய எல்லைக் கிராமமான கணேசபுரம் கிராமத்தின் சக்தி வித்தியாலய மாணவன் பாஸ்கரன் சுலக்ஷன் என்பவரே, 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சாதனை படைத்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இம் மாணவன், இம்முறை பாடசாலைகளுக்கு... Read more »

உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய அமைச்சர்!

இலங்கை திரையுலக சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படுபவரும், பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ரஞ்ஜன் ராமநாயக்க, 38 வருடங்களுக்குப் பின்னர், இன்று கல்விப் பொதுத் தரா தர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளார். அமைச்சராக பதவி வகித்து வரும் சிங்கள நடிகர் ரஞ்சன் ராமநாயக்க,... Read more »

சிறு பிக்குகளுக்கு எச்.ஐ.வி : அமைச்சர் ரஞ்ஜன் பரபரப்புத் தகவல்!

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும், அமைச்சுப் பதவியில் இருந்தும் நீக்கினாலும், பௌத்த சிறுவர் பிக்குகள், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது தொடர்பாக, நீதிக்காக குரல் கொடுக்க தயார் என, பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 8 வயது சிறுமி பலி!

பதுளை மஹியாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பல்ல, குடாவௌ பகுதியில், யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், சிறுமியின் பாட்டி பலத்த காயங்களுடன், மஹியாங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில், மஹியாங்கனை குடாவௌ பகுதியை சேர்ந்த 8 வயதுடைய... Read more »

மட்டு, போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் தேவைப்படுகின்ற அத்தியாவசிய மருந்து வகைகளின் தட்டுபாடு தொடர்பாக தெரியப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் கே.எம்.ரூபராஜன் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகளின்... Read more »

புதிய உணுவுக் காளான் அறிமுகம்

புதிய உணவுக் காளான் வர்க்கம் அறிமுகமும், அதன் உற்பத்தி மற்றும் உணவு தயாரிப்பு தொடர்பிலான செய்முறைப் பயிற்சி அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் மத்திய நிலைய கூட்ட மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் மத்திய நிலைய பொறுப்பு போதனாசிரியரும், பண்ணை பயிர்ச் செய்கை... Read more »
error: Content is protected !!