மட்டு, ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின், ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றை ஒருங்கேகொண்ட பெருமையினையுடைய அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இராம பிரானால்... Read more »

நுவரேலியா விபத்தில் குடும்பஸ்தர் பலி

நுவரெலியாவில், உழவு இயந்திரம் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில், போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்னையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளதாக, அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில், போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்னையில் இருந்து 3 ஆம் பிரிவு பகுதிக்கு பொருட்களை ஏற்றி சென்ற... Read more »

மட்டு, பட்டதாரிகளின் போராட்டம் முடிவு

பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்ற நியமனங்களின் போது, வெளிவாரிப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட வெளிவாரிப் பட்டதாரிகளால், கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம், இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக முடிவுக்குக்... Read more »

ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய, ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவிலில் திருவருள் கொண்டு அருள் பாலிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தொன்மை மிகு நாகர்முனை கந்தப்பாணத்துறை என போற்றப்பட்டு வரும் திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று ஆயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு... Read more »

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான இடம்பெற்ற வாக்கெடுப்பில், 42 வாக்குகள் ஆதரவாகவும் 2 வாக்குகள் எதிராவும் அளிக்கப்பட்டன. அதன் மூலம் அவசரகால சட்டம் மீதான பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான விவாதம், இன்று... Read more »

திரிபீடகத்தை பேணிப் பாதுகாக்க நடவடிக்கை!

திரிபீடகத்தை பேணிப் பாதுகாப்பதற்கான, திரிபீடக பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. மல்வத்தை பீடத்தின் அனுநாயக்கர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் சங்கைக்குரிய ஆனமடுவே... Read more »

வெளவாலை சந்திரசேகரீச்சரத்தில் இன்று தீர்த்தோற்சவம்!

வவுனியாவில், பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க வெளவாலை சந்திரசேகரீச்சரம் ஆலயத்தில், இந்துக்களின் விசேட தினங்களில் ஒன்றாகிய ஆடி அமாவாசை வழிபாடு சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா, செட்டிகுளம் பகுதியில், ஈழத்தின் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகிய வெளவாலை சந்திரசேகரீச்சரம் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் வரலாற்று... Read more »

நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த திட்டம் : முஜிபுர்

முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வரை கொண்டு செல்வதற்கு சிலர் விரும்புவதாக, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் தெரிவித்துள்ளார். இன்று, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற, அவசரகாலச்சட்டத்தினை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கும் விவாதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

பா.உ சுசில் பிரேமஜயந்த, ஐ.தே.க மீது குற்றச்சாட்டு!

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இலங்கை நாட்டை விட்டு வெளியேற காரணமானவர்கள், ஐக்கிய தேசிய கட்சியினர் எனவும், ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே, கறுப்பு ஜீலை இனக்கலவரம் ஐக்கிய தேசிய கட்சியினரால் ஏற்படுத்தப்பட்டதாகவும், இதனை தற்போது அவர்கள் மறந்துவிட்டு பேசுகின்றார்கள் எனவும், பாராளுமன்ற... Read more »

தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு நிச்சியம் கிடைக்கும்-பஸில்

தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஆட்சி விரைவில் மலரும்.” ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச.தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று மேலும் தெரிவித்துள்ளதாவது:- “நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னர் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும்... Read more »
error: Content is protected !!