யாழ் கொழும்புத்துறையில் கற்றல்வள நிலையம் திறந்து வைப்பு

மத்திய கல்வி அமைச்சினால் யாழ் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் லோகேஸ்வரனினால் இக்கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. பாடசாலை அதிபர்... Read more »

வவுனியாவில் வீதியை மறித்து போராட்டம்! (படங்கள் இணைப்பு)

வவுனியா பூவரசன்குளம் சந்தியில் இருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி, இன்று காலை ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீதியை மறித்து போராட்டம் நடாத்தியுள்ளனர். பூவரசன்குளம் சந்தியிலிருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதி பல ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படவில்லை எனவும்,... Read more »

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறைக் கட்டடம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஆசிரியர் விடுதியை பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீகந்தராஜா வைபவரீதியாக திறந்து வைத்தார். அருகில் உள்ள... Read more »

ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!

மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை பருத்தித்துறை நீதிவான்... Read more »

சுய தொழில் முயற்சியாளர்களுக்கு கடன்!

வவுனியா மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் யுத்த கால சொத்தழிவுகளுக்கான இழப்பீடு வழங்குதல் என்பவற்றுக்கான பயனாளிகள் தெரிவு நடவடிக்கை நேற்று இடம்பெற்றது. புனர்வாழ்வு அதிகாரசபையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, யுத்த காலத்தில் ஏற்பட்ட சொத்தழிவுக்காக... Read more »

வவுனியா புகையிரத நிலையம் வெறிச்சோடியது!

நாடளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையிலும்,... Read more »

கிளிநொச்சியில் விபத்து:இருவர் உயிரிழப்பு! (காணொளி இணைப்பு)

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்றும், எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.... Read more »

ஜேர்மன் உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கு விஜயம்! (படங்கள் இணைப்பு)

ஜேர்மன் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஜான் ரோட், கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு நேற்றைய தினம் விஜயம் செய்துள்ளார். தனது விஜயத்தின்போது, தற்போது ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் நிலைமைகள் தொடர்பாக தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது,... Read more »

வடக்கு ஆளுநர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

வட மாகாண விவசாய திணைக்கள பிரச்சினை தொடர்பில், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற, வட மாகாண விவசாய திணைக்கள கணக்காய்வு... Read more »

‘வட மாகாண வட்ட மேசை’ கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் நாளை

‘வட மாகாண வட்ட மேசை’ கலந்துரையாடல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், நாளை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. வட மாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு, கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவமுள்ளவர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கமைய,... Read more »
error: Content is protected !!