உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினமடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புளியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். Read more »

வவுனியா கடைத் தொகுதியில் 25 பேருக்குக் கொரோனா!

வவுனியா பழைய பஸ் நிலையக் கடைத் தொகுதியில் 25 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன. அதில்,... Read more »

யாழ்ப்பாணத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பம்.

72 நாட்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு ரயில் பாதையின் ஊடாக காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த ரயில் காலை 5.15க்கு... Read more »

வடக்கு மாகாணத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனாத் தொற்று.

யாழ். மாவட்டத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 45 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் 485 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11... Read more »

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் தண்ணீரின்றி வற்றிய நிலையில் குளங்கள் : பிரதேச மக்கள் கவலை

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள குளங்கள் வறட்சி நிலைமை காரணமாக தண்ணீரின்றி வற்றி காணப்படுகின்றது. அதன் காரணமாக அழகிய மலர்கள் அழிந்து வரும் நிலையிலும் கால்நடைகள் தண்ணீருக்காய் அல்லலுறும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அத்துடன் இக் குளங்களுக்கு வருடம்... Read more »

யாழ். மாவட்டத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 33 பேருக்கு கொரோனாத் தொற்று!

யாழ். மாவட்டத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 33 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 605 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், யாழ். மாவட்டத்தில் 24 பேர்... Read more »

வவுனியாவில் முகச்சவரம் செய்யும் நிலையத்தில் மூவருக்கு கொரோனா!

வவுனியா சந்தை வீதியில் அமைந்துள்ள முகச்சவரம் செய்யும் நிலையத்தில் பணிபுரியும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த வீதியுடனான போக்குவரத்து, இராணுவத்தால் துண்டிக்கப்பட்டு, தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு சுகாதார பரிசோதகர்களால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளமை... Read more »

வடக்கு மாகாணத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனாத் தொற்று!

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 23 பேர் உட்பட வடக்கில் 31 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 369 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த வகையில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேருக்கும், அளவெட்டி பிரதேச... Read more »

நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு!

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யகக்கூடும் என்றும், இதன்போது, கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை... Read more »

மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மன்னாரில் போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 420 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 36 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். Read more »
error: Content is protected !!