இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராக மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடிதம்!

வெலிஓயாவில் உள்ள சம்பத்நுவர மாவட்ட வைத்தியசாலை தலைமை அதிகாரியை, இராணுவ அதிகாரி ஒருவர் அச்சுறுத்தியுள்ளார் என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. கே.கே.எஸ் பரகும் என்ற பிரிகேடியர்... Read more »

இந்தியத் தூதர் – இரா.சம்பந்தன் கொழும்பில் திடீர் சந்திப்பு!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று மாலை திடீரென முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இந்தியத் தூதுவரின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கை – இந்திய இரு நாட்டு உறவுகள்,... Read more »

கடுமையான தொற்றாளர் மட்டுமே இனிமேல் வைத்தியசாலைகளில் :ரமேஷ் பத்திரண

அறிகுறி வெளிக்காட்டாத கொரோனா நோயாளிகளை மருத்துவமனை அல்லாத மையங்களுக்கு அனுப்பும் அதேவேளை மருத்துவமனைகளில் ஆபத்தான நோயாளிகளை மட்டும் அனுமதிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக... Read more »

அபாயகட்டத்தில் இலங்கை : ஹரித அளுத்கே

இலங்கையில் இதற்கு முன்னொரு போதும் இல்லாதவாறு ஒரே நாளில் கொரோனாவால் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதிலிருந்து நாம் அனைவரும் அபாயகட்டத்திலேயே இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் தற்போதுள்ள அபாய நிலைமை குறித்து அரச மருத்துவ... Read more »

ராஜு சிவராமனுடன், பிரதமர் சந்திப்பு

இலங்கை இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ராஜு சிவராமனை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கை இந்திய சமுதாய பேரவையின் புதிய தலைவரான ராஜு சிவராமனை கௌரவிக்கும் வகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கை இந்திய சமுதாய பேரவையினால்... Read more »

மேல் மாகாணத்தில் ஊரடங்கினால் மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்படாது : சனத் பூஜித

மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித நெருக்கடி நிலையும் ஏற்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர்இ கொரோனா... Read more »

மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்த நடவடிக்கை

நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கள் கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலாகும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். தற்பொழுது மேல்மாகாணத்தில் சில இடங்களில் காணப்படும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 02 ஆம்... Read more »

பாணந்துறை, மொரட்டுவ, ஹோமாகம மக்கள் ரயில்களில் பயணிக்கத் தடை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பாணந்துறை, மொரட்டுவ, ஹோமாகம பகுதியில் உள்ளவர்கள், மறு அறிவித்தல் கிடைக்கும் வரை, களனிவெளி மற்றும் கடலோரப் பாதைகளில் இயங்கும் ரயில்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பாணந்துறை, ஹோமாகம, ஹோமாகம வைத்தியசாலை... Read more »

பூண்டுலோயாவில் ஒருவருக்கு கொரோனா: 10 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

நுவரெலியா மாவட்டம் கொத்மலை, பூண்டுலோயா எரோ தோட்ட பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொரோன வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரியும் குறித்த நபர், அண்மையில் வீடு திரும்பியுள்ளார். இதன்போது சில இடங்களுக்கு சென்று... Read more »

மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்

நேற்றிரவு முதல் மேலும் நான்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு, ஹோமாகம மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல்வரை அமுலுக்கு வரும் வகையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர... Read more »
error: Content is protected !!