மட்டக்களப்பில் விலங்குகளுக்கு தடுப்பூசி!

சுகாதார அமைச்சு மற்றும் பொது சுகாதார மிருக வைத்திய சேவையும் இணைந்து விலங்கு விசர் நோயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் விலங்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் விலங்கு விசர் நோயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை பிராந்திய நீர்வெறுப்பு... Read more »

கல்முனைப் பிராந்தியத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் கீழுள்ள 13 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நிலையங்களில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சைனாபாம் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. சாய்ந்தமருது பொதுச்சுகாதாரப் பரிசோதகர் காரியாலயத்தில் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி யு.எஸ்.எம்.நியாஸின்... Read more »

மட்டக்களப்பு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பரிசோதனைகள் முன்னெடுப்பு

நாட்டில் பருவபெயர்ச்சி மழைபெய்து வந்த நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வீடு வீடாக டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.... Read more »

காத்தான்குடி பொலிஸ் பிரிவில், பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போதைவஸ்துடன் ஆறு பேரும் பிடியாணையில் ஒருவரும் கட்டுத்துவக்குடன் ஒருவருமாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். சம்பவத்தில் கைதான 3 பேரிடம் தலா 90 மில்லி கிராமும், மற்றுமொருவரிடம் 110 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள்... Read more »

களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில், கடந்த 05 தினங்களில், 209 பேருக்கு கொரோனா!!

களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் கடந்த ஐந்து தினங்களில் 209 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனை தெரிவித்துள்ளது. இன்று களுவாஞ்சிகுடி சுகாதாரப் பணிமனையில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள், ஏற்கனவே சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என பல தரப்பட்டவர்களுக்கும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள்... Read more »

புதுக்குயிடிருப்பு கிராமத்தில், 73 வயதுடைய முதியவர், தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு மண்முனைப்பற்றிலுள்ள புதுக்குயிடிருப்பு கிராமத்தில் 73 வயது முதியவர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதான வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான குமரப்போடி சிவலிங்கம் என்பவர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குடும்பத்தகராறு காரணமாக உயிரிழந்திருக்கலாம்... Read more »

ஹெரோயின் போதைப் பொருள் பாவனையிலீடுபட்ட 6 பேர் கைது!!

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நேரத்தைப் பயன்படுத்தி ஹெரோயின்போதைப் பொருள் பாவனையிலீடுபட்ட ஆறு பேரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளையும் மீட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.கஜநாயக்கா தெரிவித்தார். நேற்றிரவு பொலிசாருக்குக் கிடைத்த... Read more »

கல்முனையில், வீதிப் பணியாளர்கள் ஐந்து பேருக்கு கொரோனா!!

கல்முனையில் அமைந்துள்ள வாடிவீட்டு வீதியில் 25 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் வீதி புணரமைப்பு பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 5 பணியாளர்கள் மற்றும் பாண்டிருப்பில் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப்... Read more »

கணினிகளைத் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது!!

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளை, அரசாங்க பாடசாலை ஒன்றின் கணணி அறையை உடைத்து, கணனிகளையும், மின்சார உபகரணங்களையும் திருடிய இருவரை காத்தான்குடி பொலிசார் இன்று காலை கைது செய்துள்ளதாக, பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.கஜநாயக்கா தெரிவித்துள்ளார். குறித்த நபர்கள் காத்தான்குடி பொலிஸ்... Read more »

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய உற்சவம் இடம்பெறாது!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இவ் வருடம் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர். இற்றைக்கு ஐந்நூறு வருடங்களுக்கு முற்பட்ட பாண்டிருப்பு... Read more »
error: Content is protected !!