மொர்ட்டாசா விளையாடுவது உறுதி

பங்களாதேஸ் அணியின் முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் அணியின் தலைவர் மஷ்ரஃபே மொர்ட்டாசா விளையாடுவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியுடன் நேற்று இடம்பெற்ற பயிற்சி போட்டியில் அவர் காயமடைந்தார். இதனை அடுத்து அவர் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை தென்னாப்பிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள உலகக்... Read more »

உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி ஆரம்பம்!

2019ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமானது. இந்த தொடரை நடத்துகின்ற இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்க அணியும் முதல்போட்டியில் மோதுகின்றன. அதன்படி , நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணிக்கு... Read more »

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

இரணைமடுப்பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி கனகாம்பிகைக்குளத்தை சேர்ந்த 61 வயதுடைய இராசையா இராசேந்திரம் என்பவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். Read more »

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு நாளாந்தம் 20 ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் குடிநீர் வழங்கப்படுகிறது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்து 967 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இக்குடும்பங்களுக்கு பௌசர்கள் மூலம் நாள்தோறும் 20 ஆயிரம் லீற்றம்... Read more »

வங்கியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மோசடி

அரச வங்கியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் கிளையிலும்,... Read more »

7 கைக்குண்டுகள் மீட்பு

யாழ்.கொழும்புத்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து 7 கைக்குண்டுகள் இன்று (30) மீட்கப்பட்டுள்ளன. கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் உள்ள வீட்டின் மலசலகூட குழியை துப்பரவு செய்த போது குறித்த குழியினுள் கைக்குண்டுகள் காணப்பட்டதையடுத்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு... Read more »

சற்றுமுன் மீண்டும் மைத்திரி வெளியிட்ட தகவல்; அதிர்வலையில் சிறிலங்கா பாதுகாப்புத்துறை!

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார். இதன்படி கடந்த ஏப்பிரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் நடந்த தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில்... Read more »

பொதுமக்களுக்கு பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு: பயப்படவேண்டாமாம்!!

நாட்டிலுள்ள பாடசாலைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதாக வெளியாகும் வதந்திகள் குறித்து பொதுமக்கள் வீணாக அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்று பொலிஸ் பேச்சாளர் கூறுகிறார். மேலும் பாடசாலைகளில் குண்டுப் புரளி தொடர்பாக வெளியாகும் எந்தவொரு தகவலிலும் உண்மை இல்லை என்று அவர் கூறியுள்ளார். மாணவர்களின் பாதுகாப்புக் குறித்து... Read more »

உடனடியாக தடை செய்ய வேண்டும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு முக்கிய பணிப்புரையொன்றை நேற்றைய தினம் வழங்கியுள்ளார். இலங்கைக்குள் சின்சோ வகை வாள்கள் கொண்டு வரப்படுவதை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் தயாரிக்குமாறே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று... Read more »

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்!!

தங்களுடைய பிள்ளைகள், காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தால் அல்லது காய்ச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்” என தென்மாகாண கல்வியமைச்சர் சந்திமா ரசபுத்ரா, பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். Read more »
error: Content is protected !!