தளர்த்தப்பட்டது புங்குடுதீவு முடக்கநிலை

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் அமுலில் இருந்த தற்காலிக முடக்க நிலை இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது. புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலையில் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஸ்வரன் அறிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த... Read more »

மஸ்கெலியா புரன்ஸ் வீக் ஆற்றிலிருந்துஆணின் சடலம் மீட்பு!!

நுவரெலியா மஸ்கெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரன்ஸ் வீக் ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். முற்பகல் 11 மணி அளவிலேயே சடலம் இனங்காணப்பட்டுள்ளது. காலை ஏழு மணி அளவில் வீட்டிலுள்ள எவரிடமும் சொல்லாமல் வீட்டை வீட்டு வெளியேறிய, 41... Read more »

கோட்டாவின் ஆட்சிக் காலம் சிறந்த ஆட்சி காலமாக அமையும் – மகாசங்கம்!!

நாட்டின் மீதும், சமயத்தின் மீதும் பற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நிச்சயமாக நாட்டில் சமய, சமூக, எழுச்சி உருவாகுமென மகாசங்கத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மூன்று மகா நிக்காயாக்களின் மகா சங்கத்தினரின் தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு... Read more »

யாழில் வாள்வெட்டுக்கும்பல் அட்டகாசம்!!

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் வர்த்தக நிலையமொன்றுக்குள் முகங்களை துணியால் மறைத்தபடி உள்நுழைந்த வாள்வெட்டுக் கும்பல், வர்த்தக நிலையத்தைச் சேதப்படுத்தியதுடன், அங்கிருந்தவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றே நேற்றைய தினம் இந்த தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். வர்த்தக நிலையத்திற்கு இரண்டு மோட்டார்... Read more »

மஹர சிறைச்சாலை புத்தர் சிலை விவகாரம் : ஜனாதிபதி பிரதமர் நடவடிக்கை எடுக்க ரிசாட் எம்.பி கோரிக்கை!

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமை வாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழி செயலை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் எம்.பி தெரிவித்துள்ளார்.... Read more »

வடக்கு, கிழக்கு புகையிரதக்கடவை ஊழியர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்!

வடக்கு, கிழக்கு மாகாண புகையிரதக்கடவை ஊழியர்கள் நேற்றைய தினம் வவுனியாவில் கலந்;துரையாடலில் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடல் வடக்கு, கிழக்கு புகையிரதக்கடவைக் காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் றொகான் ராஜ்குமார் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலில் பங்கேற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த புகையிரதக்கடவை ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகள்... Read more »

உதய கம்மன்பிலவின் கருத்துக்கு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் கண்டனம்!

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் தகவல்களைத் தாருங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களைத் தருகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்துக்கு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. முல்லைத்தீவில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, காணாமல்... Read more »

வடக்கில் இரு திணைக்களங்களுக்கு புதியவர்கள் நியமனம்!

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளராக இராஜேந்திரம் குருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் நியமனக் கடிதத்தினை நேற்று வழங்கி வைத்தார். இராஜேந்திரம் குருபரன் முன்பு வடமாகாண விளையாட்டுத்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வடக்கு மாகாண... Read more »

முல்லை. மன்னாகண்டலில் சட்டவிரோத மணல் அகழ்வு!

முல்லைத்தீவு மன்னாகண்டல் பேராறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் பேராறு பகுதியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வின் மூலம், புதிதாக அமைக்கப்பட்ட... Read more »

கிளிநொச்சியில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை!

இரணைமடுக் குளத்தின் கீழ் உள்ள சிறுபோக பயிர்ச்செய்கைக்கான குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரணைமடுக் குளத்தின் கீழ் 15,000 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளலாம் எனவும், உப பயிர்ச்;செய்கையாக உழுந்து, கௌப்பி, பயறு மற்றும் நிலக்கடலை... Read more »
error: Content is protected !!