இனரீதியிலான பிரச்சினைகளுக்கு ஒழுக்கமற்ற மதத் தலைவர்களே காரணம்

மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி போன்ற ஒழுக்கமற்ற மதத்தலைவர்களினால் இந்த நாட்டில் இனரீதியிலான பல்வேறு பிரச்சினைகள் எற்படுவதாக கிழக்கு மாகாண சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரும் தற்போதைய வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருமான எம்எஸ் சுபைர்     தெரிவித்துள்ளார். ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள சிங்கள... Read more »

பலாச்சோலை கிராமத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுகோரி மட்டக்களப்பு- களுவன்கேணி பலாச்சோலை கிராமத்தில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது... Read more »

ஆறுமுகத்தான் குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

நாட்டில் புதிதாக ஆறு இலட்சம் பேரை சமுர்த்தித்திட்டத்தில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தினால் விசேட திட்ட  முன்னெடுக்கப்பட்டபோதிலும் பிரதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பயனாளிகள் தெரிவின்போது தாம் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்து பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு- ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேசத்தில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது... Read more »

இரண்டாம் தவணைக்காக திறக்கப்பட்டன முஸ்லிம் பாடசாலைகள்

நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாந்தவணைக்காக இன்று திறக்கப்பட்டன. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் பின்னர் இன்று முஸ்லிம் பாடசாலைகள் மீளதிறக்கப்பட்ட போது பாதுகாப்பினை கருத்திற் கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர்  பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 75 முஸ்லிம் பாடசாலைகளைக்கொண்டமட்டக்களப்பு மத்தி கல்வி... Read more »

ஏறாவூரில் இலவச வைத்திய சேவை!

முதியோர்களது நலன்கருதி சமூக வலுவூட்டல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இலவச வைத்திய சேவை  மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதியோர் செயலகம் இச்சேவையினை கிராம சேவையாளர் பிரிவுகள் தோறும் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் மீராகேணி கிராமத்தில்பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்ஏசி. நஜிமுதீன் தலைமையில் நடைபெற்ற... Read more »

காட்டு யானைகளினால் மூன்று தென்னந் தோட்டங்கள் அழிப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள  தளவாய் சேனவட்டை பிரதேசத்தில் காட்டுயானைகளினால் மூன்று தென்னந்தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இன்றுஅதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்னந் தோட்டங்களுக்குள் உட்புகுந்த யானைகள் சுமார் இருநூறு தென்னங்கன்றுகளை துவம்சம் செய்துள்ளன. பற்குணசிங்கம் ஜெயகாந்தன், சறவணபவான் ராஜேஸ்வரன் மற்றும் யோகராசா லுவானந்தராஜா... Read more »

விபத்தில் இரு இளைஞர்கள் பலி

மட்டக்களப்பு -கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு பகுதியில் நோற்று இரவு இடம்பெற்ற விபத்தில் செங்கலடியை சேர்ந்த இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். இவர்கள் கித்துள் கிராமத்தில் உள்ள வயலொன்றிற்கு சென்று வீடு திரும்பும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென வீதியின் குறுக்கே சென்ற சருகுபுலி... Read more »

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக உருவாக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவேண்டும்,  கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள பெரும்பான்மை இனத்தைச் செர்ந்த மாணவர்கள் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில்... Read more »
error: Content is protected !!