சிவசிதம்பரத்திற்கு யாழ் வடமராட்சியில் உருவச்சிலை

முன்னாள் பிரதி சபாநாயகர் முருகேசு சிவசிதம்பரத்தின் உருவச்சிலை, வடமராட்சி கரவெட்டியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதி சபாநாயகரும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவருமான முருகேசு சிவசிதம்பரத்தின் உருவச்சிலை நேற்று வடமராட்சி கரவெட்டியில், தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி சபாநாயகர் மு.சிவசிதம்பரத்தின், பிறந்த இல்லமான கரவெட்டி பெரியதோட்டத்தில் த.சிறிஸ்கந்தசிங்கம் தலைமையில் உருவச்சிலை திறப்பு விழாநிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியால் முன்னாள் பிரதி சபாநாயகர் மு.சிவசிதம்பரத்தின் உருவச்சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து, உருவச்சிலைக்கு, மு.சிவசிதம்பரத்தின் சகோதரர் மு.சிற்றம்பலம் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதையடுத்து, நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் மலரஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதிசபாநாயகர் தொடர்பான நினைவுரையை மூத்த பத்திரிகையாளர் வீ.தனபாலசிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலரும் நிகழ்த்தினர்.

தொடர்ந்து தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியால் சிறப்புரையாற்றப்பட்டது.

இதேவேளை, முன்னாள் சபாநாயகரின் உருவச் சிலை திறப்பு விழா நிகழ்வில், அறக்கட்டளை ஒன்றும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், கரவெட்டி பிரதேசத்தில் இருந்து மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி மற்றும் கலைத்துறைக்கு தெரிவான இரு மாணவிகளுக்கும் 25 ஆயிரம் ரூபா பணப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!