கோட்டபாயவிற்கு மகாசங்கத்தினரால் வழங்கப்பட்ட பொறுப்புக்கள்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்சவிற்கு மகா சங்கத்தினரிடமிருந்து 2 பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸவிற்கு, நாட்டில் நிறைவேற்ற வேண்டிய இரு பொறுப்புக்கள் இருப்பதாக, மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ருவன்வெலிசாயா சதுக்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்ட மகா சங்கத்தினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அதில் ஒன்று, மகா சங்கத்தினருடையவும், நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எனவும், இரண்டாவது, மனதில் தனிப்பட்ட நலன்களைப் பிற்படுத்தி, முதலாவதும், இரண்டாவதும், மூன்றாவதும் இடத்தை நாட்டுக்குக் கொடுப்பது எனவும் மகா சங்கத்தினர் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!