வடகொரிய ஜனாதிபதி தன்னுடன் பேச்சுவார்த்தை நடாத்த, மீண்டும் விருப்பு வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த வடகொரிய ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளதாக,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தகவல் வெளியிட்டுள்ளார்.
வடகொரியாவின் எதிர்ப்பினை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் இராணுவ கூட்டுப்பயிற்சியை நடாத்திவருகின்றன.
இதற்கு வடகொரிய தரப்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், அடுத்தடுத்து ஏவுகணை பரிசோதனையும் நடாத்தி எச்சரிக்கையும் செய்யப்பட்டது.
வடகொரியாவின் செயற்பாடுகளால் அமெரிக்க வடகொரிய உறவில் விரிசல் ஏற்படும் என எதிர்நோக்கப்பட்ட நிலையில், வடகொரியா ஏவுகணை பரிசோதனை தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ருவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த ருவிட்டர் பதிவில், கூட்டுப் பயிற்சி எப்போது நிறுத்தப்படுமோ அப்போதே, ஏவுகணை சோதனை நிறுத்தப்படும், அணு ஆயுதம் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த தன்னை சந்திக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.