நல்லூர் ஆலய வளாகத்தில் மூவர் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக முறையில் நடமாடிய மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நடைபெற்றுவரும் நிலையில், ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக முறையில் நடமாடிய மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 10 மணியளவில், சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்கள், யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, நல்லூர் ஆலய வளாகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியின் பாதுகாப்புக் கடமைகளுக்காக மேலும் பல இராணுவத்தினர் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவோர்மீதும் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!