மலையகத்தில் மண்சரிவு அபாயம்:மக்கள் இடப்பெயர்வு

நுவரெலியா கொட்டகலையில், கற்பாறை விழும் அபாயம் காரணமாக 4 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

நுவரெலியா கொட்டகலை பிரதேச சபைக்குட்பட மே பில்ட் தோட்டத்தின் நான்காம் லயன் குடியிருப்பு பகுதியில் கற்பாறை இடிந்து விழும் அபாயம் காரணமாக 4 குடும்பங்கள் இடம்யெர்நத நிலையில், பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள கொட்டக்கலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிராசத் தெரிவித்துள்ளார்.

குறித்த லயன் குடியிருப்பு மீது நேற்றிரவு, மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 17 வயதுடைய சிறுமியும் 54 வயது பெண்மணியும் காயமடைந்த நிலையிலேயே, லயன்குடியிருப்பில் வசித்த 4 குடும்பங்களைச் சேரந்த 18 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த சிறுமியும், முதிய பெண்மணியும் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை தோட்ட நிர்வாகத்தினரும், பொதுமக்களும் வழங்கி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் மண்சரிவு அபாயமுள்ளதா என ஆராயுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் முடிவுகளினடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மாற்றிடம் குறித்து முடிவெடுக்கப்படும் என கொட்டகலை பிரதேசசபை தவிசாளர் ராஜமணி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!