மழையுடன் கூடிய காலநிலை தொடரும்-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பிரதேசங்களிலும் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களிலும் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களில் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் திடீரென அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும், இது குறித்து அடுத்த 36 மணி நேரத்திற்குள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இடைக்கிடை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் கூறியுள்ளது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!