தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவிலுள்ள கேரளாவில்; இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக கர்நாடக இயற்கை பேரிடர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது. அவ்வறிக்கையில், ‘கர்நாடகாவில் கடந்த ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் இன்றுவரை மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 14 பேர் காணாமல் போயுள்ளதுடன் 5 இலட்சத்து 81 ஆயிரத்து 702 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 17 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 1168 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தால் கர்நாடகாவில் 2028 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று கேரளாவில் மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி கடந்த ஆகஸ்ட் 8 முதல் 11 வரையிலான காலகட்டத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 58 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கேரள பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்துக்கது. (007)