காங்கேசந்துறையில் 80 கிலோ கஞ்சா கைப்பற்றல்!

இந்திய கடல் வழியாக இலங்கையின் வடக்கு கடற்பரப்பு ஊடாக காங்கேசன்துறைக்கு கொண்டு வரப்பட்ட 80 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இக் கஞ்சா கடத்தல் முறியடிப்பு இன்று காலை 4.00 மணிக்கு இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் மூவரும் மன்னார், உடுத்துறை, மற்றும் பருத்தித்துறை பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை காங்கேசன்துறை கடற்பரப்பு ஊடாக கஞ்சா கடத்தல் மற்றும் பரிமாற்றும் நடவடிக்கை ஒன்று இடம்பெறவுள்ளதாக கடற்படையின் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இதன் அடிப்படையில் குறித்த கடற்பரப்பில் தேடுதல் மேற்கொண்ட கடற்படையினர் 80 கிலோ கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 1 கோடியே 60 இலட்சம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்களும் கைப்பற்;றப்பட்ட கஞ்சா பொதிகளும், மேலதிக சட்ட நடவடிக்கையின் நிமித்தம் காங்கேசன்துறை தலைமைப்பீட பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!