மலையத்தில் கடும் மழை : பொது மக்கள் பாதிப்பு

மலையகத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.


தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

சில பகுதிகளில் ஆங்காங்கே கற்கள் புரள்வதனாலும், மண்சரிவு அபாயம் நிலவுவதனாலும் 03 குடும்பங்களைச் சேர்;ந்த 18 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்வதனால், சில வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

நீரேந்தும் பிரதேசங்களுக்கு பெய்து வரும் கனத்த மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகு விரைவாக உயர்ந்து வருகின்றது.
இதனால் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், வான்கதவுகள் ஊடாக நீர் வான் பாய்கின்றன.
சில பகுதிகளில் கடும் மழை காரணமாக ஆறு பெருகெடுத்து வீடுகளுக்கு வெள்ளநீர் புகுந்துள்ளது.

தொடர்ச்சியாக அடிக்கடி மழை பெய்து வருவதனால் ஹட்டன் கொழும்பு ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண் திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.

இதனால் இவ்வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளை மிகவும் அவதானமாக பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மலையக பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே மண்திட்டுக்களுக்கும் மலைகளுக்கு சமீபமாக வாழ்பவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை மலையகத்தில் தீ விபத்து காரணமாக தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து வரும் மக்கள் மழை காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் விவசாய உற்பத்தியாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கால்;நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளுக்கு புற்கள் அறுக்க முடியாததன் காரணமாக பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்;.
இதனால் தங்களுடைய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மழையுடன் கடும் குளிர் நிலவி வருவதனால் தேயிலை உற்பத்தியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அதிகமான தொழிலாளர்கள் கடும் குளிர் மற்றும் மழை காரணமாக வேலைக்கு சமூகமளிக்கவில்லை என தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!