அரசியல் அமைப்பு ஊடாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு வேண்டும் : சுமந்திரன்

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரவேண்டுமாகவிருந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒரு அரசியல் அமைப்பு ஊடாக உறுதிசெய்யப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு, மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.

நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, ஒக்ரோபர் புரட்சியின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைதியாக இருந்திருந்தால் அதனால் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்களே என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இந்த அரசாங்க காலத்தில் எதுவும் நடைபெறவில்லையென யாரும் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்தார். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!