சூழல்காற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு

நாட்டின் சில பகுதிகளில் அண்மையில் வீசிய சுழல்காற்று காரணமாக, சேதமடைந்த வீடுகளுக்கு நஸ்ட ஈட்டினை வழங்குவதற்கான பணிகள், அந்தந்த கிராமசேவையாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்படுவதாக, அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2079 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில், காலி முதல் மாத்தறை வரையான பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!