மலையகத்தில் மழை: பல்வேறு பாதிப்பு

மலையகத்தில் தொடரும் மழையின் காரணமாக, மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியின் மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.


இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து சிலமணி நேரம் தடைப்பட்டு இருந்தாக, நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மதியம் ஏற்பட்ட மண்சரிவினையடுத்து, வீதி அதிகாரசபையின் முயற்சியால் பெக்கோ இயந்திரத்தினை கொண்டு மண்மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


குறித்த வீதி ஒருவழி போக்குவரத்து வீதியாக தற்காலிகமாக மாற்றபட்டுள்ளது.

இந்நிலையில் அவ்வீதியின் ஊடாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளை கோரியுள்ளனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!