யாழ், எழுதுமட்டுவாழ் பகுதியில் கொள்ளை

கனடா நாட்டில் இருந்து வந்த பெண் ஒருவரின் நகைகள், பணம் என்பன எழுதுமட்டுவாள் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து கொள்ளையடிக்கப்பட்டு சென்ற சம்பவம் நேற்று யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


இக் கொள்ளைச்சம்பவத்தில் 35 பவுண் நகை, 10 இலட்சம் ரூபா பணம் மற்றும் 700 கனேடியன் டொலர் என்பன கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரினால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. நேற்றுமுன்தினம் தனது ஊரினை பார்ப்பதற்காக கனடா நாட்டில் இருந்து பெண் ஒருவர் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

இதனை அறிந்த கொள்ளையர்கள் நேற்று இரவு முகத்தினை துணியால் மறைத்து வீட்டின் பின் பக்க கதவினை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த முதியவர்களை கடுமையாக தாக்கிவிட்டு நகை, பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கறுப்பு நிற துணியால் முகத்தினை மறைத்து வீட்டுக்குள் புகுந்த ஜந்து கொள்ளையர்களே இந்த துணிகர கொள்ளையினை மேற்கொண்டுவிட்டு தப்பியுள்ளனர். ஊரில் உள்ள ஆலயம் ஒன்றின் திருப்பணிக்காக கனடா நாட்டில் இருந்து 10 இலட்சம் ரூபாவினை உண்டியல் மூலம் அனுப்பிய குறித்த பெண் நேற்றுமுன்தினம் வவுனியா சென்று அதனைப் பெற்றுள்ளார்.

இதனை அறிந்தவர்களே இந்த துணிகர கொள்ளையினை மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் மோப்ப நாய் மற்றும் தடயவியல் பொலிஸாரினால் விசாரணை முண்ணெடுக்கப்பட்டபோதிலும், சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

இச்சம்பவத்தினையடுத்து, எழுதுமட்டுவாள் பகுதியில் அச்ச நிலை உருவாகி உள்ளது. (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!