மட்டக்களப்பில் தேசிய டெனிஸ் சுற்றுப்போட்டி : வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் சங்கம் மற்றும் இலங்கை டெனிஸ் சம்மேளனமும் இனைந்து தேசிய ரீதியாக பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட தேசிய டெனிஸ் சுற்றுப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

தேசிய ரீதியில் 12 வயதுக்கு கீழ்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட தேசிய டெனிஸ் சுற்றுப்போட்டியில் நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் டெனிஸ் விளையாட்டில் விளையாடுகின்ற பாடசாலை மாணவர்கள் இந்த சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய ரீதியிலான டெனிஸ் சுற்றுப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

டெனிஸ் சுற்றுப்போட்டி ஒருங்கிணைப்பாளர் எஸ்.சியானந்த் ஒழுங்கமைப்பில் இலங்கை டெனிஸ் சம்மேளனத்தின் டெனிஸ் அபிவிருத்தி தலைமை அலுவலகர் பாரதிராஜ் பிள்ளை தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட டெனிஸ் பயிற்சி நிலைய தலைவர் என்.ஜனன், மாவட்ட டெனிஸ் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தர்சன், மாவட்ட டெனிஸ் பயிற்சி நிலையத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் தினேஷ் ஆகியோர் அதிகளாக கலந்துகொண்டனர்.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!