முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸநாயக்க, முல்லைத்தீவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு, தென்னை மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.
வடக்கையும், கிழக்கையும், எல் வலயமாக இணைத்து தென்னைப் பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, 200இற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தென்னைப் பயிர்ச் செய்கைக்கான மானியத் தொகையை வழங்கி வைத்து அமைச்சர் நவீன் திஸாநாயக்க உரையாற்றியுள்ளார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இவ் அரசாங்கம் தமிழ் மக்களுக்கான பிரச்சனைகளை தீர்க்கத் தவறும் பட்சத்தில், சர்வதேச நாடுகளின் உதவிகளை நாட தமிழ்தேசியகூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (007)