விசேட தேவையுடையோரை சந்தித்த முன்னாள் முதலமைச்சர்

வவுனியாவிற்கு விஜயம் செய்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் வவுனியா, வரோட், தாய்மடி இல்லத்தில் தங்கியிருக்கும் விசேட தேவையுடையோரை சந்தித்து அவர்களது பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.


வரோட், தாய்மடியில் தங்கிருக்கும் 50 இற்கும் மேற்பட்ட விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதுடன், அவர்களது தேவைகள் குறித்து, அவர்களை பராமரிக்கும் அருட் தந்தையர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது முதலமைச்சரை மாலை அணிவித்து வரவேற்ற விசேட தேவையுடையோர், தம்மை வந்து சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பில் தமது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

இச்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டனியின் வவுனியா அமைப்பாளர் செ.சிறிதரன், இளைஞரணி தலைவர் எஸ்.கிறிஸ்ண மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!