ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்து!

உலகவாழ் இஸ்லாமியர்கள் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் பங்குபற்றும் ஒரு மத வழிபாடாகவே ஹஜ் யாத்திரை அமைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹஜ் என்ற சொல் ஒரு புனித பூமியை நோக்கிய யாத்திரையையே குறிக்கின்றது. உலக வாழ் இஸ்லாமியர்கள் ஐக்கியத்துடனும் சகோதரத்துடனும் பங்குபற்றும் பாரிய மத வழிபாடாகவே அவர்களது ஹஜ் யாத்திரை அமைகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஈகை மற்றும் ஹஜ் யாத்திரை ஆகிய ஐம்பெரும் தூண்களின் மீது எழுந்து நிற்கும் இஸ்லாமிய மார்க்கமானது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான உன்னத பிணைப்பை எடுத்துக்காட்டுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!