சமூகத்திலுள்ள ஏழை – பணக்கார வித்தியாசத்தையும் வேறு பேதங்களையும் களைந்து சமத்துவம், சகோதரத்துவத்தை உருவாக்குவதே ஹஜ் பெருநாளின் முக்கிய நோக்கம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சவால்களும் தடைகளும் நிறைந்த இன்றைய உலகில் பரஸ்பரம் மனிதர்களுக்கிடையில் இருக்க வேண்டிய பிணைப்பின் மகிமையை விளக்குவதற்கு ஹஜ் யாத்திரை சிறந்ததோர் முன்னுதாரணமாக விளங்குவதாக குறிப்பிட்ட பிரதமர் முஸ்லிம் மக்களுக்கு ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.(நி)