மன்னாரில் அமைதியாக நடைபெற்ற ஹஜ் பெருநாள்.(காணொளி இணைப்பு)

நாட்டில் உள்ள முஸ்ஸிம் மக்கள் இன்றைய தினம் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸிம் மக்களும் இன்றைய தினம் புனித ஹஜ் பெருநாளை அமைதியான முறையில் கொண்டாடுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் ஆண்,பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.

மன்னார் மூர்வீதி ஜூம்மா பள்ளிவாசலில் காலை 8.00 மணியளவில் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.

மூர்வீதி ஜூம்மா பள்ளிவாசல் மௌலவி எஸ்.ஏ.அஸீம் தலைமையில் பெருநாள் தொழுகைகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றன.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!