அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில், சரஸ்வதி வித்தியாலய வளைவில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்தில் அக்கரைப்பற்று நாவற்குடாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்கிலில் பயணித்துக் கொண்டு இருந்த வேளை தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய வளையில் மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் உள்ள வடிகானுக்குள் விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தை அடுத்து காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இளைஞன் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(நி)