சீனாவை தாக்கிய ‘லெக்கிமா’ சூறாவளி!

கிழக்கு சீனாவை தாக்கிய சூறாவளியில் பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்வடைந்துள்ளது.

கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் எற்பட்ட சூறாவளி மற்றும் நிலச்சரிவு காரணமாக 32பேர் பலியாகியுள்ளதோடு, 16 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

‘லெக்கிமா’ என பெயரிடப்பட்ட சூறாவளி நேற்று சீனாவின் வெல்னிங் நகரத்தை தாக்கியது.

இதன்போது, அங்கு கன மழை கொட்டித்தீர்த்ததுடன், நகரில் காணப்பட்ட ஏரி ஒன்றின் தடுப்பு உடைந்து வீழ்ந்ததில் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு, சூறாவளி காரணமாக 173 ஆயிரம் ஹெக்டர் பயிர்கள் மற்றும் 34 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!