மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறையில் 59 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள்ப் போட்டி நேற்று நடைபெற்றது.
நாணயற் சுழற்சியில் வெற்றியீட்டிய இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.
இதனடிப்டையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 7 இலக்குகளை மாத்திரம் இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைப்படி, 46 பந்துப் பரிமாற்றத்தில் 270 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
270 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அனைத்து இலக்குகளையும் இழந்து 210 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதன்படி இந்திய அணி 59 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.(நி)