சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக்க நடவடிக்கை!

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து சபரிமலைக்கான யாத்திரையை, புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு,அரச கரும சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு முகத்துவாரத்தில் நேற்று இடம்பெற்ற, இந்து சமய மறுமலர்ச்சிக்கான நடமாடும் மக்கள் சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, இந்து சமய அலுவல்களை ஒழுங்குபடுத்தும் மற்றுமொரு அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!