05 மீனவர்களுக்கு தோணிகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை மூதூர் கடற்கரையில் தோணிகள் இன்றி,வறுமைக் கோட்டுக்குட்பட்ட நிலையில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு
தோணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸின் வேண்டுகோளின் பிரகாரம், ஹிம்மத்துல் உம்மா பவுண்டேசனால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 5 மீனவர்களுக்கே இவ்வாறு தோணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமது வாழ்வாதார நிலமையை உணர்ந்து, தோணிகளை வழங்கி வைத்தவர்களுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!