முகங்களை மாற்றுவதால் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி விடமுடியாது – பிரதமர் ரணில்

உடை மற்றும் முகத்தை மாற்றுவதால் மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, 10 வருடங்களாக மாற்றத்தை ஏற்படுத்த முடியாதவர்கள் ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவார்களா எனவும் பிரதமர் கேள்வியெழுப்பியுள்ளார்.

குருநாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் விசேட சக்தி ஏதும் கிடைக்கப்போவதில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாரளாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அறிவிக்கப்பட்டார். பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைவர் பொறுப்பைப் பொறுப்பேற்றுக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!