உலகளாவிய ரீதியில் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கிய பண்டிகை, ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாளாகும்.
இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
இன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள், ஹஜ் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் உழ்ஹிய்யா கடமையையும் நிறைவேற்றுவார்கள்.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
அந்தவகையில் இன்றையதினம் உலகின் சகல பாகங்களில் இருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா மாநகரில் மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து இலட்சக் கணக்கான மக்கள் ஒன்றுகூடி ஹஜ் வழிபாடுகளில் ஈடுபட்டனர். (மு)