பெரியநீலாவனைக்கு எம்.பி விஜயம்

கடந்த 2004 இல் கல்முனை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்து வரும் பெரியநீலாவணை சுனாமி தொடர்மாடிக் குடியிருப்பில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்பில், அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் இன்று நேரில் சென்றுகலந்துரையாடியுள்ளார்.

இங்குள்ள சுனாமி தொடர்மாடிக் குடியிருப்பில் 450 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இங்குள்ள மலசலகூடக் கழிவுக் குழிகள் நிரம்பி வழிவதினால் பல்வேறு சுகாதார சீர்கேட்டிற்கு அம்மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். இதனால் குடியிருப்பு மனைகளில்குடியிருக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் பல தடவைகள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இன்று குடியிருப்பு மனைக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மக்களுடன் கலந்துரையாடியதுடன் தனது விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 50 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதுடன். புதிய மலசலக்கூடக் கழிவுக்குழிகளை உடன் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுத்தள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான க.சிவலிங்கம், பொன்.செல்வநாயகம், எஸ்.குபேரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மக்கள் குடியிருப்பு மனைகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களது ஏனைய பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இங்கு மிக நீண்டகாலமாக நிலவி வந்த மலசலக்கூட கழிவுக்குழிகள் நிரம்பி வழியும் பிரச்சினைக்கு உடனடித் தீர்வினைப் பெற்றக்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு, மக்கள் நன்றி தெரிவித்தனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!