வவுனியாவில், தென்னை அபிவிருத்தி திட்ட நிகழ்வு!

பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, இன்று வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.
பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும், தென்னை பயிர்ச் செய்கை சபையினால் ஒழுங்கு செய்யபட்ட, தென்னை அபிவிருத்தி திட்ட நிகழ்வு, இன்று நடைபெற்றது.


இதன் போது, வவுனியா மற்றும் மன்னாரில் தென்னை பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் 600 பயனாளிகளுக்கு, உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, உதவிகளை வழங்கி வைத்தார்.

300 பேருக்கு 30 இலட்சம் பெறுமதியான காசோலைகளும், 300 பேருக்கு தென்னை பயிர் உட்பட உள்ளீடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

தென்னை பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் பெ.உதயசந்திரன் தலைமையில், வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில், அமைச்சின் செயலாளர் எ.ரந்யித், வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், தென்னை அபிவிருத்தி சபை தலைவர் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!