வரலாற்றுச் சிறப்பு மிக்க, மட்டக்களப்பு ஏறாவூர் அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா, இன்று நடைபெற்ற தீ மிதிப்புடன் நிறைவு பெற்றது.
இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த இந்து பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருச்சடங்கு கடந்த 3 ஆந்திகதி மடையெடுப்புடன் ஆரம்பமாகி திருக்கதவு திறத்தல், விசேட அபிஷேகங்கள், கற்பூர ஆரத்தி, வீரகம்பம் வெட்டுதல், பாற்கலசபவனி, தெய்வாதீகளின் அருள்வாக்குப்பெறுதல் போன்ற கிரியைகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.
இறுதி நாளான இன்று பலியிடல், தீபாராதனை, தீ மிதிப்பு, சர்க்கரையமுது, கன்னிமார் காத்தான்மார் வழிபாடு, அம்மன் காவியம், வாழிபாடுதல், செவ்வாட்டையாடல், நோர்ப்பெறிதல் போன்ற நிகழ்வுகளுடன் அன்னையின் திருச்சடங்குகள் நிறைவுற்றது.
திருச்சடங்கு கிரியைகள் விஸ்வப்பிரம்ம ஸ்ரீ கு.வாமதேவன் ஜயா தலைமையில் நடைபெற்றதுடன் ஆலயத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமை வைரவர் பூஜை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. (007)