ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளனர்.
இன்று மாலை, ஜனாதிபதி வேட்பளராக கோட்டபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இணைந்து, கோட்டபாய ராஜபக்சவின் பதாகைகளைத் தாங்கியவாறு, யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் முன்பாக, வெடி கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். (007)