நுவரெலியா, ஹட்டன் புனித அன்னமாள் திருவிழா இன்று !

நுவரெலியா ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில், புனித அன்னம்மாளின் வருடாந்த திருவிழாவும் திருச்சொரூப பவனியும், கொட்டும் மழையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மத்திய மாகாண அதிவணக்கத்திற்குரிய வியாணி பர்னாண்டோ ஆண்டகை தலைமையில், திருவிழாத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து, திருச்சொரூப ஊர்வலம், ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி, ஹட்டன் நகர் ஊடாக சென்று, மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

திருவிழாவை முன்னிட்டு, ஹட்டன் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருந்தனர்.
கடந்த 4 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில், 9 நாட்கள் பூஜைகள் நடைபெற்று, இன்று திருவிழா நடைபெற்றது.

ஆலய பங்குத்தந்தை நிவ்மன் பீரிஸ் அடிகளாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற திருச்சொரூப பவனியில், கொட்டும் மழையின் மத்தியிலும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இணைந்து கொண்டனர்.
திருசொரூப ஊர்வலத்தில், பாடல்கள் மற்றும் பான்ட் வாத்திய இசை என்பவும் இடம்பெற்றன. (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!