ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய மாநாடு, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில், இன்று மாலை 3.00 மணியளவில் ஆரம்பமானது.
இதன் போது, முக்கிய நிகழ்வாக கட்சியின் தலைமைத்துவம், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இருந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொறுப்பளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரும் எதிர்க்கட்சிதலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, நீண்ட உரை நிகழ்த்தினார்.
அந்த உரையின் இறுதியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டார். (சி)