ஜனாதிபதியை மக்கள் தீர்மானிக்க வேண்டும் : சமீர பெரேரா

ராஜபக்ஷ குடும்பத்தினரால், புதிதாக நாட்டிற்கு எதனை வழங்க முடியும் என, தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவர் சமீர பெரேரா கேள்வி ஏழுப்புயுள்ளார்.


இன்று, நுவரெலியா ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

ராஜபக்ஷ குடும்பத்தினர், இந்த நாட்டுக்கு கொடுக்கப் போவது என்ன? இறுதியாக இந்த நாட்டுக்கு எதனை விட்டு வைத்தார்?
எதனை கொடுத்தார்? புதிய வேலைத்திட்டங்களா? இல்லை.

இறுதியில் வெளிநாடுகளில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து கொடுத்தார். மீத்தொட்டமுல்லவில் உள்ள குப்பைகளை, இருந்த இடத்திலேயே வைத்தார்.

சீனா நாட்டில் இருந்து பெருந்தொகையான கடன் சுமையை கொண்டு வந்து கொடுத்தார். இந்த நாட்டில் உள்ள காணிகளை பிடித்துக்கொண்டு மக்களை இங்கிருந்து விரட்டினார்.

அதனால்தான் 2015 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 8 ஆம் திகதி, 60 இலட்சம் வாக்குகளால், மஹிந்த ராஜபக்ஷ அவர்களை வீட்டுக்கு அனுப்பினோம்.

மஹிந்த ஆட்சிக் காலத்தின் போது, பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபாய ராஐபக்ஷ என்ன செய்தார் என்பது, இந்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

பாதுகாப்பு பிரதான தலைமையகத்தை, சீனா நாட்டின் செங்ரிலா நிறுவனத்திற்கு விற்பனை செய்து, இறுதியில் பத்தரமுல்ல அக்குரேகொட பகுதியில் அமைக்க, அவருக்கு நன்கு பரீட்சையமான ஒப்பந்தகாரரிடம் வழங்கி, மில்லியன் அளவில் ஏமாற்றி விட்டார்.

அதற்கு தற்பொழுது விசாரனைகள் இடம்பெற்று வருகிறது. இந்த நாட்டின் தேசிய கடற்படையை, எவன்காட் நிறுவனத்திற்கு வழங்கியவர்.

தனது பெற்றோரை பெருமைப்படுத்துவதற்காக, அரும்காட்சியகம் அமைக்க பொது மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்.
2010 ஆம் ஆண்டு, அமெரிக்க நாட்டு பிரஜையைபோல் ஆவணங்களை தயாரித்து, அமெரிக்க நாட்டுக்கு வீதியை அமைத்தவர்.
கோட்டபாய ராஐபக்ஷ நியாயமான மனிதர் என்றால், நீதிமன்றத்திற்கு சென்று, நான் நியாயமானவர் என்று கூற வேண்டும்.
அவர் செய்த தவறுகளை முடிமறைக்க, மில்லியன் அளவில் பணத்தை செலவு செய்து, வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தவர், எப்படி ஐனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியும்.

ராஐபக்ஷ குடும்பத்தோடு உறவு முறையை வைத்திருந்தவர்கள் அனைவரும், மில்லியன் கனக்கில் களவாடியவர்கள்.
இதனைத்தான் இந்த நாட்டுக்கு அவர்கள் தேடிக் கொடுத்தது.

ஐனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஐபக்ஷ அவர்களோடு போட்டியிட, சஜித் பிரேமதாசவிற்கு என்ன தகுதி இருக்கு என, சிலர் கேட்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரிய வருகிறது.

ராஐபக்ஷ குடும்பத்திற்கு இருக்கின்ற பெரிய பயம் சஜித் பிரேமேதாச.

நான் ஒன்றை கூறுகிறேன்.சஜித் பிரேமதாசவுடைய தகுதியை பற்றி கேட்க வேண்டாம்.

தகுதியை பற்றிக்கேட்க வேண்டுமானால், கோட்டாபே ராஐபக்ஷ போன்றவர்களுடைய தகுதியை முதலில் பரிசீலனை செய்து பாருங்கள்.

கோட்டபாய ராஐபக்சவிற்கு அரசியல் அனுபவம் இருக்கிறதா? அல்லது அவர் இலங்கை பிரஜயா?
அல்லது இலங்கை நாட்டில் இருக்கிறாரா? அவர் அமெரிக்கா பிரஜையென ஒப்பந்தம் செய்துள்ளார்.

சஜித் பிரேமேதாச அவர்களின் தகுதியை பற்றி, இந்த நாட்டில் உள்ள, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என்றுமே கேட்டதில்லை.
அவருடயை தகுதி குறித்து ரவி கருனாநாயக்க போன்றவர்களுக்கு தான் பிரச்சினை இருக்கிறது.

குப்பைகள் இருக்க வேண்டும். குப்பைகள் இருக்கும் இடத்தில், ரவி கருணாநாயக்கவிடம் இருக்கும் ஊழல்களை வைத்துக்கொண்டு, ரவி கருணாநாயக்கவிற்கு யார் ஐனாதிபதி வேட்பாளர் என்று தீர்மானிக்க முடியாது.

அதனை இந்த நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.  யார் ஜனாதிபதி வேட்பாளர் என்று தீர்மானித்து விட்டார்கள்.
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!