சுந்தரர் குருபூஜையும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் அறநெறி பாடசாலைகள் மற்றும் திருநாவுக்கரசுநாயனார் குருகுல ஆதீனத்தின் ஏற்பாட்டில் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளின் குருபூஜையும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.


இந்நிகழ்வுகள் விநாயகபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய குரு சிவஸ்ரீ ஆறுமுக கிருபாகர சர்மா தலைமையில் விநாயகபுரம் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இங்கு சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவுருவப் படத்திற்கு விநாயகபுரம் சிவனாலய குருவினால் தீபாராதணைகள் காட்டப்பட்டதை தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமியின் அவதாரம் மற்றும் அற்புதங்கள் தொடர்பான சொற்பொழிவுகளும் அதிதிகளால் நிகழ்த்தப்பட்டது.

இந்;து சமய பொது அறிவு மற்றும் மனப்பாங்கு பரீட்சையில் சித்தி பெற்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

விநாயகபுரம் முத்துமாரி அம்மன், சக்தி மற்றும் ஸ்ரீமுருகன் அறநெறிப் பாடசாலைகள்; மற்றும் தம்பிலுவில் திருநாவக்கரசுநாயனார் குருகுல ஆதீன ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கே.சதீசேகரன் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன் அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசுநாயனார் குருகுல ஆதீனப் பணிப்பாளர் இறைபணிச் செம்மல் கண.இராஜரெத்தினம், அதன் செயலாளர் ப.சந்திரேஸ்வரன், விநாயகபுர் சிவன் ஆலயபிரதம குரு சிவஸ்ரீ கே.யுதர்சன் சர்மா, பிரதேச சபை உறுப்பினர் வீ.ஜெயச்சந்திரன் மற்றும் அறநெறி ஆசிரியைகள் பெற்யோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.(007)

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!