தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட காரியாலயம், வவுனியா மன்னார் பிரதான வீதியில் உள்ள கற்பகபுரம் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி.விக்னேஸ்வரன், தாண்டிக்குளம் முருகன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர், மன்னார் வீதிவழியாக ஊர்வலமாக வருகை தந்து கட்சியின் காரியாலயத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ம.தியாகராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன், கட்சியின் ஆதரவாளர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.(நி)