தன்சானியாவில் பெட்ரோல் லொறி வெடித்து 62 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஆபிரிக்க நாடான தன்சானியாவில் நேற்றைய தினம் பெட்ரோல் லொறி வெடித்து சிதறியதில் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் கவிழ்ந்த லொறியிலிருந்து வழிந்த பெட்ரோலை பலர் எடுத்துக்கொண்டிருந்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோரோகோரோ நகர் அருகே சென்று கொண்டிருந்த பெட்ரோல் லொறி, நிலைதடுமாறி கவிழ்ந்ததையடுத்து, அந்த லொறியிலிருந்து பெட்ரோல் வழிந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர் வழிந்துகொண்டிருந்த பெட்ரோலை எடுப்பதற்காக அங்கு கூடியிருந்தனர்.

இதன்போது, லொரி வெடித்துச் சிதறியதில் அங்கிருந்த 62 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன், சுமார் 70 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!