யாழில் சடலமாக மீட்கப்பட்டவரை அடையாளம் காண உதவுக!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்ட முதியவரின் சடலத்தை அடையாளங்காண உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட முதியவர் 5 அடி 3அங்குலம் உயரமும் 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும், கறுப்பு நிற தலைமுடியும், சாரம் அணிந்தும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொடர்பில் அறிந்தவர்கள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 0212222222 அல்லது 0213211248 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!