நிலாவெளி கடலில் மூழ்கி இருவர் பலி!

திருகோணமலை நிலாவெளி கடற்பகுதியில் கடலில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் திருகோணமலையில் உறவினரின் வீட்டுக்கு சென்ற நிலையில் நால்வர் கடலில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, 20 மற்றும் 15 வயது மதிக்க தக்க இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி தத்தளித்தவேளை அங்கிருந்த மீனவர்களால் இருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!