யாழில் டிப்பர் குடைசாய்ந்து விபத்து!

யாழ்ப்பாணம், காரைநகர் – பொன்னாலை வீதியில் இன்று காலை டிப்பர் வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில், காரைநகருக்கான நன்னீர் குழாய் சேதமடைந்துள்ளது.

காரைநகர் பொன்னாலை சந்திப் பாலத்தின் ஊடாக மணல் ஏற்றிக்கொண்டு காரைநகர் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் டிப்பர் வாகன சாரதி சிறுகாயங்களுக்குள்ளானார்.

இதன்போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிய டிப்பர் வாகனம் குடைசாய்ந்ததில், நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அதிகார சபையின் நன்னீர்க் குழாய் சேதமாக்கியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!