பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு-டிலான் பெரேரா

பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் தாம் கலந்து கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது மாநாடு இன்று நடைபெறவுள்ளது.

இந்த மாநட்டில் தாம் நிச்சயமாக கலந்து கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் பொதுஜன பெரமுன அறிவிக்கும் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்காக தாம் செயற்படபோவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சம்மேளன மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் முரண்பாடு நிலவுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக ஒன்றும், ஆதரவாக ஒன்றும் காணப்படுகின்றது.

ஆயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பது சாதகமான சூழலாக இருக்கின்றது.

எனினும் சிலர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக இருக்கின்றார்கள்.

எனவே இவ்வாறான நிலையில் அதில் கலந்து கொள்வது சரியல்ல.’ என டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!